கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.42 லட்சத்தை தாண்டியது…

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.42 லட்சத்தை தாண்டியது…

நம் நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் பரவல் நினைத்து பார்க்காத அளவில் இருக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.42 லட்சத்தை தாண்டியது…

தொடர்ந்து 4வது நாளாக நேற்றும் நம் நாட்டில் புதிதாக 6 ஆயிரத்துக்கும் அதிகமான பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. நேற்று மட்டும் புதிதாக 6,087 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து நம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.42 லட்சத்தை தாண்டி விட்டது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.42 லட்சத்தை தாண்டியது…

நாடு முழுவதுமாக நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 150 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 60 பேர் தொற்று நோய்க்கு பலியாகி உள்ளனர். அம்மாநிலத்தில் மும்பையில் மட்டும் கொரோனா வைரஸால் 38 பேர் இறந்துள்ளனர். குஜராத் (30), டெல்லி (15) மற்றும் மத்திய பிரதேசம் (10) ஆகிய மாநிலங்களிலும் கணிசமான உயிர் இழப்புகளை கொரோனா ஏற்படுத்தியுள்ளது.