கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.29 லட்சத்தை தாண்டியது

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.29 லட்சத்தை தாண்டியது

நம் நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் பரவல் நினைத்து பார்க்காத அளவில் இருக்கிறது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.29 லட்சத்தை தாண்டியது

மாநில அரசுகளின் லேட்டஸ்ட் அறிக்கையின்படி, நேற்று மட்டும் நம் நாட்டில் புதிதாக 6,378 பேருக்கு தொற்று நோயான கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இதுவரை நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,29,539 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.29 லட்சத்தை தாண்டியது

மேலும், நேற்று மட்டும் கொரோனா வைரசுக்கு 144 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 7 தினங்களாக கொரோனா வைரஸால் தினமும் 130க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். இதனையடுத்து இதுவரை தொற்று நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3,870ஆக உயர்ந்துள்ளது.