கொரோனாவுக்கு 3,300 பேர் பலி… கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.05 லட்சத்தை தாண்டியது….

 

கொரோனாவுக்கு 3,300 பேர் பலி… கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.05 லட்சத்தை தாண்டியது….

நம் நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் கடந்த ஒரு வார காலத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

கொரோனாவுக்கு 3,300 பேர் பலி… கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.05 லட்சத்தை தாண்டியது….

மாநில அரசுகளின் லேட்டஸ்ட் அறிக்கையின்படி, நேற்று மட்டும் நம் நாட்டில் புதிதாக 5,212 பேருக்கு தொற்று நோயான கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இதுவரை நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,05,527 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனாவிலிருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 42,071ஆக உயர்ந்துள்ளது. அதாவது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 39.8 சதவீதம் குணம் அடைந்துள்ளனர். மேலும் தொற்று நோயான கொரோனாவுக்கு இதுவரை 3,300 பேர் உயிர் இழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு மிகவும் மோசமாக உள்ள முதல் 5 மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா (37,136) தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவ இடத்தில் தமிழ்நாடும் (12,448), மூன்றாவது இடத்தில் குஜராத்தும் (12,141) உள்ளன. நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் முறையே டெல்லி (10,554) மற்றும் ராஜஸ்தான் (5,845) மாநிலங்கள் உள்ளன.