கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.50 லட்சத்தை தாண்டியது…

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.50 லட்சத்தை தாண்டியது…

நம் நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்து வந்தது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.50 லட்சத்தை தாண்டியது…

இந்நிலையில் நேற்று நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்ததுள்ளது. நேற்று மட்டும் புதிதாக 5,502 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 தினங்களில் நேற்றுதான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிறிது குறைந்துள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.50 லட்சத்தை தாண்டியது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.50 லட்சத்தை தாண்டியது…

மேலும் நேற்று மட்டும் நாடு முழுவதுமாக கொரோனா வைரசுக்கு 172 பேர் இறந்துள்ளனர். இதுவரையிலான காலத்தில் ஒரே நாளில் அதிக உயிர் இழப்பு ஏற்பட்ட இரண்டாவது அதிகபட்ச அளவாகும். லாக்டவுன் விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பிறகு 5 மாநிலங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.