இந்தியாவில் 3.20 லட்சம் பேருக்கு கொரோனா…! 24 மணி நேரத்தில் 311 பேர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றில் இருந்து 49,346 பேர் குணமடைந்துள்ள நிலையில், 3,830 பேர் உயிரிழந்துள்ளனர்

இதுவரை உலகம் முழுவதும் 78 லட்சத்து 59 ஆயிரத்து 557 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 4 லட்சத்து 32 ஆயிரத்து 168 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 40 லட்சத்து 35 ஆயிரத்து 421 பேர் குணமாகியுள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 3,08,993லிருந்து 3,20,922 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,62,379 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,195 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 11,929 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 311 பேர் உயிரிழந்துள்ளனர் மகாராஷ்டிராவில் இதுவரை 1,04,568 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 49,346 பேர் குணமடைந்துள்ள நிலையில், 3,830 பேர் உயிரிழந்துள்ளனர்

- Advertisment -

Most Popular

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு என்ன காரணம்? – கொந்தளிக்கும் சமூகநல ஆர்வலர்கள்

போக்சோ சட்டம் ஊரடங்கில் குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் சொல்கின்றனர். தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டின் முன்...

இலாகா ஒதுக்குவது முதல்வரின் உரிமை… யாரும் தலையிடக் கூடாது.. சிந்தியாவுக்கு குட்டு வைத்த பா.ஜ.க. எம்.பி.

மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவால் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைந்தது. இதற்கு கைமாறாக ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவியை பா.ஜ.க. கொடுத்தது. மேலும், மத்திய...

கேரள தங்க கடத்தல் விவகாரம்… முதல்வர் பினராயி விஜயனை பதவி விலக்கோரும் காங்கிரஸ், பா.ஜ.க.

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சரக்கு விமானத்தில் அந்நகரில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு ஒரு பார்சல் வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் அதனை ஆய்வு...

சி.பி.எஸ்.இ. பாடம் விவகாரம்… மதசார்பின்மை கொள்கைகளில் பா.ஜ.க.வுக்கு நம்பிக்கை இல்லை.. சித்தராமையா தாக்கு

இந்த கல்வியாண்டில் மாணவர்களின் சுமையை குறைக்கும் நோக்கில், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்களில் 30 சதவீதம் வரை குறைக்கப்படும் என மத்திய அரச அறிவித்தது. இதனை தொடர்ந்து சி.பி.எஸ்.இ....
Open

ttn

Close