Home தமிழகம் தேனியில் மேலும் 132 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று : பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு!

தேனியில் மேலும் 132 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று : பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு!

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 70 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,985 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 70 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,551 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 87,235 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தேனியில் மேலும் 132 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு 2,733ஆக உயர்ந்துள்ளது. அங்கு இன்று ஒரே நாளில் 2 பேர் பலியான நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

காஷ்மீரில் கல் வீசுதல், பந்த் போன்ற நடவடிக்கைகளில் இப்பம் யாரும் ஈடுபடுவதில்லை.. மேஜர் ஜெனரல் தகவல்

வடக்கு காஷ்மீரில் கல் வீசுதல் மற்றும் பந்த் போன்ற நடவடிக்கைகளில் இப்போது யாரும் ஈடுபடுவதில்லை என்று மேஜர் ஜெனரல் எச்.எஸ். ஷஹி தெரிவித்தார். காஷ்மீரின் சிறப்பு...

திருமண பாக்கியம் அருளும் ஆண்டாள் ஸ்லோகம்!

ஆண்டாள் நாச்சியார் பூமாதேவியின் அவதாரமாக பார்க்கப்படுகிறார். 12 ஆழ்வார்களில் ஒரே பெண் இவர்தான். மிகச்சிறந்த பெருமாள் பக்தை. தோட்டத்தில் பச்சிளம் குழந்தையாக பெரியாழ்வாரால் கண்டுபிடிக்கப்பட்டவர் ஆண்டாள். மிகச்சிறந்த விஷ்ணு பக்தையாக...

நிச்சய உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும் சில உணவுகள்!

ஆரோக்கியமான உணவுகள் எது என்று ஓரளவுக்கு தெரிந்து வைத்துள்ளோம். ஆரோக்கியமில்லாத உணவு, சாப்பிட்டால் நிச்சயம் உடல்நல குறைபாட்டை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ள சில உணவுகள் பற்றித் தெரியுமா... தினமும்...

ஏப்ரல் 6 மிகவும் பரபரப்பான தேர்தல் நாளாக அமையும்.. ஒரே நாளில் 475 சட்டமன்ற, 2 எம்.பி. தொகுதிகளுக்கு தேர்தல்

ஏப்ரல் 6 மிகவும் பரபரப்பான தேர்தல் நாளாக அமையும். ஏனென்றால் அன்று புதுச்சேரி மற்றும் 4 மாநிலங்களில் மொத்தம் 475 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 3 எம்.பி. தொகுதிகளுக்கு தேர்தல்...
TopTamilNews