பயணிகள் விமானத்தில் கொரோனா தடுப்பூசிகளை கொண்டு செல்லலாம்!

 

பயணிகள் விமானத்தில் கொரோனா தடுப்பூசிகளை கொண்டு செல்லலாம்!

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை பயணிகள் விமானத்தில் கொண்டு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது வரை ஓய்ந்தபாடில்லை. கிட்டத்தட்ட 10 மாதங்களாக கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஒரு வழியாக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. 2021ல் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு போடப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்ததன் படி, வரும் 13ம் தேதி முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்படவிருக்கிறது.

பயணிகள் விமானத்தில் கொரோனா தடுப்பூசிகளை கொண்டு செல்லலாம்!

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு மருந்துகள் அனைத்து கட்ட பரிசோதனைகளிலும் வெற்றி பெற்றதால், அந்த மருந்துகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என சான்றளிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கூட அந்த மருந்துகளை செலுத்தலாம் என டிசிஜிஐ தெரிவித்துள்ளது. கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் ஜன.13ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பயணிகள் விமானத்தில் கொரோனா தடுப்பூசிகளை எடுத்துச் செல்லலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களுக்கு கொரோனா தடுப்பூசி விரைவில் கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு, இந்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.