கொரோனா தடுப்பு மருந்து – அமெரிக்க தேர்தல் முடிவை தீர்மானிக்குமா?

 

கொரோனா தடுப்பு மருந்து – அமெரிக்க தேர்தல் முடிவை தீர்மானிக்குமா?

அமெரிக்காவில் தேர்தல் நெருங்கி வருகிறது. அதனால் பிரசாரங்களில் அனல் பறக்கிறது. கொரோனா நோய்த் தொற்று ஒருபக்கம் அமெரிக்காவில் அதிகரித்தாலும் தேர்தல் வேலைகளும் படு மும்முரமாக நடந்து வருகின்றன.

நவம்பர் மாதம் 3-ம் தேதியன்று அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கிறது.  குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார்.  ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட  இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார். 

கொரோனா தடுப்பு மருந்து – அமெரிக்க தேர்தல் முடிவை தீர்மானிக்குமா?

இந்தத் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கப்பது கொரோனா தடுப்பு மருந்து என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தவறிவிட்டதாகவும், மரணங்கள் அதிகரிப்பதை நிருத்த பெரிய அளவில் முயற்சிகள் செய்ய வில்லை என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 74 லட்சத்து  89 ஆயிரத்து 116 பேர்.  இதில், அமெரிக்காவின் பாதிப்பு எண்ணிக்கை  64,85,575.

கொரோனா தடுப்பு மருந்து – அமெரிக்க தேர்தல் முடிவை தீர்மானிக்குமா?

உலகளவில் கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 8 லட்சத்து 96 ஆயிரத்து 865 பேர். இதில், அமெரிக்காவின் பாதிப்பு எண்ணிக்கை 1,88,903.

இந்தச் சூழல் அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.  அதனால்தான், அதிபர் ட்ரம்ப் தேர்தலுக்கு முன்பு கொரோனா தடுப்பூசியை அமெரிக்காவுக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்.

கொரோனா தடுப்பு மருந்து – அமெரிக்க தேர்தல் முடிவை தீர்மானிக்குமா?

நவம்பர் 3 –ம் தேதி தேர்தல் எனும் நிலையில் நவம்பர் 1 –ம் தேதி கொரோனா தடுப்பூசியை அமெரிக்காவில் பயன்படுத்த ட்ரம்ப் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் சொல்கின்றன. அதற்கேற்ற வாறு, நவம்பர்  1-ம் தேதி அமெரிக்காவில் அனைத்து சுகாதார மையங்களைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அமெரிக்காவின் நோய்த் தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை மையத்தின் இயக்குநர் கடிதம் எழுதியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதிபர் டொனால்டு ட்ரம்ப், கொரோனா தடுப்பு மருந்து பற்றி சொல்லும் எதிலும் நம்பகத் தன்மை இல்லை என்று துனை அதிபருக்குப் போட்டியிடும் கமலா ஹாரீஸ் தெரிவித்திருந்தார். அந்தக் கருத்தைக் கேட்டு சூடாகி விட்டார் ட்ரம்ப்.

கொரோனா தடுப்பு மருந்து – அமெரிக்க தேர்தல் முடிவை தீர்மானிக்குமா?

கொரோனா தடுப்பு மருந்தைப் பற்றி தவறாகப் பேசிய ஜோபிடனும் கமலா ஹாரீஸூம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோபத்துடன் பேசியுள்ளார் ட்ரம்ப்.  நான் சாதித்துவிடுவேன் என்று பயந்து இப்படி இழிவு படுத்துகிறார்கள். விரைவில் பாதுகாப்பான கொரோனா தடுப்பு மருந்து வெளியாகும்’ என்றும் கூறியுள்ளார்.

ஆக, அமெரிக்காவின் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியமான காரணியாக கொரோனா தடுப்பு மருந்து மாறிவிட்டது. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் இருக்கும் நிலையில் என்னென்ன வாதங்கள் இருதரப்பிலிருந்து வரும் என்பதைப் பொருத்திருந்து பார்ப்போம்.