’16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும்’ : மத்திய அரசு அறிவிப்பு!

 

’16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும்’ : மத்திய அரசு அறிவிப்பு!

நாடு முழுவதும் வரும் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான பல மாத போராட்டம் முடிவுக்கு வரப் போவதாக தெரிகிறது. கொரோனா வைரசுக்கு எதிரான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமை அனுமதி அளித்து விட்டது. தன்னார்வலர்களிடம் 3 கட்டமாக நடத்தப்பட்ட பரிசோதனையிலும், கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வெற்றி அடைந்துள்ளன. அதனால், விரைவில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அண்மையில் மத்திய அரசு அறிவித்திருந்தது.

’16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும்’ : மத்திய அரசு அறிவிப்பு!

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி தேதி குறித்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் வரும் 16ம் தேதி முதல் தடுப்பூசி போடலாம் என முடிவெடுக்கப்பட்டது. முதல் கட்டமாக முன்களப் பணியாளர்கள் 3 கோடி பேருக்கும், அடுத்த கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்ட 27 கோடி பேருக்கும் கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

’16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும்’ : மத்திய அரசு அறிவிப்பு!

அவர்களை தொடர்ந்து, இணை நோய்கள் இருக்கும் 50 வயதுக்கு உட்பட்டோருக்கும் அதன் பிறகு எஞ்சியிருப்பவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பின் படி, பிப்ரவரி மாதத்திற்குள் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.