கொரோனா தடுப்பூசி : செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை என்னென்ன?

 

கொரோனா தடுப்பூசி : செய்ய வேண்டியவை, செய்ய  கூடாதவை என்னென்ன?

நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி அமலுக்கு வருகிறது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். 2934 மையங்களில், மூன்று கோடி முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதை தொடர்ந்து, 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. தமிழகத்தில் 166 மையங்களில் தொடங்கவுள்ள தடுப்பூசி திட்டத்தை முதல்வர் பழனிசாமி மதுரையில் இன்று தொடங்கி வைக்கிறார். 160 இடங்களில் 98,284 பேருக்கு கோவிஷீல்டுக, 6 இடங்களில் 19,073 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

கொரோனா தடுப்பூசி : செய்ய வேண்டியவை, செய்ய  கூடாதவை என்னென்ன?

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்த செய்ய வேண்டியவை, செலுத்தி கொண்ட பின் செய்ய கூடாதவையை இங்கு பார்க்கலாம்.

*கர்ப்பிணிகள் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

*கொரோனா தடுப்பூசிக்கும் மற்ற தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதற்கும் 14 நாட்கள் இடைவெளி அவசியம்.

கொரோனா தடுப்பூசி : செய்ய வேண்டியவை, செய்ய  கூடாதவை என்னென்ன?

*நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.

*தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய நாளில் நாளில் சளி, இருமல் இருந்தால் அன்றைய நாள் தடுப்பூசி போடுவதை தவிப்பது நல்லது.

*தடுப்பூசி செலுத்தி கொண்ட பின் லேசான வலி, தடிப்பு ஏற்படலாம் .

*கொரோனா தடுப்பூசிக்கு முதலில் செலுத்தப்படும் மருந்தையே இரண்டாவது முறையும் செலுத்தவேண்டும்.

*தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் 28 நாட்களுக்கு மது அருந்தக்கூடாது