கொரோனா தடுப்பூசி – ஃபைசர் நிறுவனம் தரும் இரண்டு நம்பிக்கைகள்

 

கொரோனா தடுப்பூசி – ஃபைசர் நிறுவனம் தரும் இரண்டு நம்பிக்கைகள்

கொரோனா அச்சம் இல்லாத நாடே இல்லை எனும் அளவுக்கு நிலைமை கைமீறி போய்க்கொண்டிருக்கிறது. பல நாடுகளில் இரண்டாம் அலை கொரோனா பரவல் தொடங்கி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவே கொரோனாவைச் சமாளிக்க் முடியாமல் தவித்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 5 கோடியே 65 லட்சத்து 64 ஆயிரத்து 339 பேர். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 13 லட்சத்து 54 ஆயிரத்து 813 பேர். குணம் அடைந்தோர் 3 கோடியே 93 லட்சத்து 52 ஆயிரத்து 858 நபர்கள். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,58,56,668 பேர்.

கொரோனா தடுப்பூசி – ஃபைசர் நிறுவனம் தரும் இரண்டு நம்பிக்கைகள்

கொரோனா தடுப்பூசியின் உடனடியாகத் தேவைப்படும் நாடு அமெரிக்கா. ஏனெனில், அங்குதான் தினமும் ஒன்றரை லட்சம் பேருக்கு மேல் புதிய நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். அமெரிக்காவின் புகழ்பெற்ற ஃபைசர் நிறுவனம் தடுப்பூசி தயாரிப்பதில் மும்முரமாக இருக்கிறது. சென்ற மாதம் ஃபைசர் கம்பெனியின் சிஇஒ ஆல்பர்ட் போர்லா, “எங்கள் ஆய்வில் உள்ள கொரோனா தடுப்பு மருந்து, அமெரிக்க அரசு எங்கள் கண்டுபிடிக்கு அனுமதி அளிக்கும்பட்சத்தில் இந்த வருடம் டிசம்பருக்குள் கொரோனா தடுப்பூசி வெளியாக வாய்ப்பிருக்கிறது” என்று நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்.

தற்போது அமெரிக்காவில் நான்கு மாகாணங்களில் முதலில் கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்ய முடிவெடுத்துள்ளது ஃபைசர் நிறுவனம். மேலும், அதன் அறிவிப்புகளில் இரண்டு நம்பிக்கையான செய்திகள் உள்ளன.

கொரோனா தடுப்பூசி – ஃபைசர் நிறுவனம் தரும் இரண்டு நம்பிக்கைகள்

ஒன்று: ஃபைசர் நிறுவனம் தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்து பல சோதனைகளுக்குப் பிறகு 95 சதவிகித பலன் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. இது நிஜமாகவே பெரும் ஆறுதலை அளிக்கும் செய்தியாகும். ஏனெனில், பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், சில நாடுகளில் சோதனை அளவிலும், சில நாடுகளில் சோதனையில் தோல்வி எனும் நிலையில் இருக்கும்பட்சத்தில் 95 சதவித பலன் என்பது பெரிய விஷயம்.

இரண்டு: தங்கள் நிறுவனத்தில் தடுப்பு மருந்து டிசம்பர் 25 -ம் தேதிக்குள் அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் அவசரகால பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளது. ஏனெனில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மூலம் கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடும் என பலரும் அச்சப்பட்டு வரும் நிலையில் இது பெரும் நம்பிக்கை அளிப்பதாகும்.