அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்!

 

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்!

கொரோனாவுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு எனும் நிலையை நோக்கி உலக நாடுகளின் போக்கு சென்றுகொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 83 லட்சத்து 70 ஆயிரத்து 296 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 88 லட்சத்து 53 ஆயிரத்து 887 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 90 ஆயிரத்து 919 பேர்.

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்!

ரஷ்யா ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா தடுப்பு மருந்தான ஸ்புட்னிக் V -யைக் கண்டறிந்தது. ஆனால், அது இன்னமும் பரவாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர வில்லை.

உலக நாடுகள் பலவற்றில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முக்கிய ஆய்வுகள் நடந்து வருகின்றன. அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் எனும் நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்!

அந்நிறுவனத்தின் தடுப்பு மருந்து இரண்டு கட்ட பரிசோதனைகளை வெற்றிகரமாகக் கடந்து மூன்றாம் கட்டத்தில் தற்போது உள்ளது. இந்நிலையில் அந்தத் தடுப்பு மருந்து அளிக்கப்பட்ட தன்னார்வலருக்கு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டதால், கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்டப் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தன்னார்வலரின் உடல்நலப் பிரச்சனைக்கு என்ன காரணம் என அறியப்பட்டு, பரிசோதனையைத் தொடர்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது. அதற்கு சில நாட்கள் ஆகக்கூடும்.