கோவையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு… ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற பொதுமக்கள்…

 

கோவையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு… ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற பொதுமக்கள்…

கோவை

கோவை அரசு கல்லூரி வளாகத்தில் செயல்படும் கொரோனா தடுப்பூசி மையத்தில், நேற்று தடுப்பூசி தீர்ந்ததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கோவை மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 1500-ஐ கடந்துள்ள நிலையில், பொதுமக்கள் ஆர்முடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த தடுப்பூசி மையம், சில நாட்களுக்கு முன்பு கோவை அரசு கலை கல்லூரி வளாகத்திற்கு மாற்றப்பட்டது.

கோவையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு… ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற பொதுமக்கள்…

இதனையடுத்து, நாள்தோறும் அங்கு ஏராளமானோர் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று காலை தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்லூரி வளாகத்தில் காத்திருந்தனர்.

தடுப்பூசி செலுத்த தொடங்கிய சிறிது நேரத்தில் தீர்ந்து விட்டது. இதனால், தடுப்பூசி தீர்ந்து விட்டாதாக மருத்துவ பணியாளர்கள் அறிவிப்பு பலகையில் எழுதி வைத்தனர். இதனை கண்டு, அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.