கொரோனா தடுப்பூசி – கிளினிக்கல் சோதனைகளை முடித்த முதல் நாடு ரஷ்யா

 

கொரோனா தடுப்பூசி – கிளினிக்கல் சோதனைகளை முடித்த முதல் நாடு ரஷ்யா

கொரோனாவை எதிர்த்து போராடுவதில் உலகமே திணறிவருகிறது. புதிய நோயாளிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றன பல நாடுகள். அதில் இந்தியாவும் ஒன்றுதான்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 89 லட்சத்து  28 ஆயிரத்து 207 பேர்.    

 கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 20 ஆயிரத்து 208 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள். 

கொரோனா தடுப்பூசி – கிளினிக்கல் சோதனைகளை முடித்த முதல் நாடு ரஷ்யா

தடுப்பூசி மட்டுமே கொரோனாவைத் தடுக்கும் ஒரே வழியாக மாறிவிட்டது.  அதற்கான முயற்சிகளில் பல நாட்டு விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வில் ஈடுபட்டுள்ளார்கள்.

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யாவின் கேமாலியா நிறுவனம் தயாரித்துவிட்டது. அதை ஆகஸ்ட் 12-ம் தேதி பதிவும் செய்துவிட்டது. இந்த மருந்தின் நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்பப்படும் என்பதை அறிந்த அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின், ஸ்புட்னிக் 5 எனும் பெயரிட்ட அந்த தடுப்பூசியை தன் மகளுக்கே போடச் சொன்னார்.

கொரோனா தடுப்பூசி – கிளினிக்கல் சோதனைகளை முடித்த முதல் நாடு ரஷ்யா
. (AP Photo/Ted S. Warren)

ஆனபோதும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அம்மருந்து குறித்த சந்தேகங்கள் கிளப்பி வந்தது. ஆனால், புகழ்பெற்ற மருத்துவ இதழான லாசெண்ட், ஸ்புட்னிக் 5 பாதுக்காப்பானது என்று ஆய்வறிந்து கட்டுரை எழுதியது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசியில் கிளினிக்கல் டெஸ்ட் முடித்த முதல் நாடாக ரஷ்யா திகழ்கிறது. இதை அந்நாட்டு  செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்னும் ஓரிரு நாளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஸ்புட்னிக் V வந்துவிடும் என்றே தெரிகிறது.