Home இந்தியா கொரோனா தடுப்பு மருந்து- ஏழை நாடுகளுக்கு உதவ பணக்கார நாடுகள் முடிவு !

கொரோனா தடுப்பு மருந்து- ஏழை நாடுகளுக்கு உதவ பணக்கார நாடுகள் முடிவு !

அடுத்த வாரத்தில் ஜி20 நாடுகளின் கூட்டம் சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளது. காணொளி காட்சி வழியாக நடைபெறும் இந்த கூட்டத்தில், தற்போதைய சூழலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது. பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளின் கூட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் கூடி முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கூட்டம் அடுத்த வாரத்தில் நடைபெற உள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து- ஏழை நாடுகளுக்கு உதவ பணக்கார நாடுகள் முடிவு !
கொரோனா தடுப்பு மருந்து- ஏழை நாடுகளுக்கு உதவ பணக்கார நாடுகள் முடிவு !

இந்தக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி, தேவைகள் மற்றும் உலக நாடுகளிலேயே பகிர்ந்துகொள்வது ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது. குறிப்பாக பொருளாதாரத்தில் நலிவடைந்த நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்தினை குறைந்த விலையில், அந்த நாடுகளுக்கு மருந்துகளை அளிப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்படவுள்ளன. பொருளாதாரத்தில் நலிவடைந்த நாடுகளுக்கு உதவுவதற்காக ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு 450 கோடி டாலர் உதவி செய்துள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து- ஏழை நாடுகளுக்கு உதவ பணக்கார நாடுகள் முடிவு !

இரண்டு நாள் நிகழ்வாக இந்த அமர்வு நடைபெறவிருக்கிறது. இதுதொடர்பாக ஜி20 உயர் அதிகாரிகள் கூறுகையில், கொரோனா மருந்து விநியோகத்தில் ஒவ்வொரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமாக பேசப்படும் என்று கூறினர். கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே உலக நாடுகளின் பொருளாதாரம் மிக மோசமான பின்னடைவை சந்தித்தது. இந்த நிலையில் ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பு பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கைகள் குறித்த பேச உள்ளது. உலக நாடுகளின் ஏற்றுமதி, ஒற்றுமையுடன் செயல் படுவது, தடுப்புமருந்து உருவாக்கத்தில் தீவிரம் என பல்வேறு விஷயங்கள் பேசப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது .

கொரோனா தடுப்பு மருந்து- ஏழை நாடுகளுக்கு உதவ பணக்கார நாடுகள் முடிவு !
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

கொரோனா கோர தாண்டவம்… 38 கர்ப்பிணிகள் மரணம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடுகிறது. முதல் அலை வயதானவர்களையும் குழந்தைகளையுமே அதிகமாக தாக்கிய நிலையில் இரண்டாம் அலை பாரபட்சமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும்...

திருப்பூரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது, ஆக்சிஜன் பேருந்து!

திருப்பூர் திருப்பூரில் தொண்டு நிறுவனங்களின் சார்பில் வடிவமைக்கப்பட்ட ஆக்சிஜன் பேருந்து, இன்று முதல் நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா...

சென்செக்ஸ் 42 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.41 லட்சம் கோடி நஷ்டம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்தது. சென்செக்ஸ் 42 புள்ளிகள் உயர்ந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன்...

அவர வரச் சொல்லுங்க… காவலாளியை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின்...
- Advertisment -
TopTamilNews