தமிழகத்தில் ஜன.2ம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை!

 

தமிழகத்தில் ஜன.2ம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை!

ஜன.2ம் தேதி முதல் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வராத சூழலில், தற்போது வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 25 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனிடையே ஆந்திரா, அசாம், பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய 4 மாநிலங்களிலும் கடந்த வாரம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது.

தமிழகத்தில் ஜன.2ம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை!

இந்த நிலையில், அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும் வரும் ஜன.2ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறவிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். மாநில சுகாதார செயலாளர்கள் உடனான ஆலோசனையில் பேசிய அவர், மூன்று கட்டங்களாக தடுப்பூசி ஒத்திகை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் தடுப்பூசி ஒத்திகைக்கு தயாராக இருக்குமாறும் அவர் கூறியுள்ளார்.