அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: மத்திய அரசு தகவல்!

 

அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: மத்திய அரசு தகவல்!

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த வண்ணமே உள்ளது. உயிரிழப்புகளும் குறைவாக இருக்கும் சூழலில், புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதாக வெளியாகும் தகவல் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா தடுப்பூசி வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்திருகிறது. அதே போல, இந்தியா உட்பட்ட அனைத்து நாடுகளும் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட பரிசோதனையில் உள்ளது.

அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: மத்திய அரசு தகவல்!

இது குறித்து அண்மையில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்தியாவில் இருக்கும் அனைவர்க்கும் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில், இந்தியாவில் அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கவிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆந்திரா, அசாம், பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.