சென்னையில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி ஒத்திகை!

 

சென்னையில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி ஒத்திகை!

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியின் ஒத்திகை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தொடங்கியது.

உலக நாடுகளை உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரசுக்கு எதிரான கொரோனா தடுப்பூசி ஒத்திகை கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ஆந்திரா, அசாம், பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன் படி, இன்று நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் 259 மையங்களில் ஒத்திகை தொடங்கியிருக்கிறது.

சென்னையில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி ஒத்திகை!

இந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு 2 மணி நேரத்தில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடக்கிறது. ஊசி எதுவும் போடாமல் கோவின் செயலி மூலம் சுகாதார பணியாளர்கள் ஒத்திகையில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். தடுப்பூசி வந்த பிறகு எப்படி பயன்படுத்துவது உள்ளிட்ட நடைமுறைகள் குறித்து ஒத்திகை பார்க்கப்படுக்கிறது. தமிழகத்தின் 5 மாவட்டங்களில் 17 இடங்களில் ஒத்திகை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.