கொரோனா தடுப்பூசி : பிரதமர் மோடி இன்று ஆய்வு!

 

கொரோனா தடுப்பூசி : பிரதமர் மோடி இன்று ஆய்வு!

கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி இன்று மூன்று இடங்களில் ஆய்வு மேற்கொள்கிறார்.

கொரோனா தடுப்பூசி : பிரதமர் மோடி இன்று ஆய்வு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த மார்ச் முதல் ஏற்பட்ட நிலையில் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதுவரை சுமார் 93 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இதுவரை 1,35,715 பேர் பலியாகியுள்ளனர். இருப்பினும் இந்த நோயை கட்டுப்படுத்தும் மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

கொரோனா தடுப்பூசி : பிரதமர் மோடி இன்று ஆய்வு!

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் மேற்கொண்டு வரும் அகமதாபாத்தில் சைடஸ் பயோடெக் பார்க், ஐதராபாத்தில் பாரத் பயோடெக் நிறுவனங்களில் பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்கிறார். புனே சீரம் இன்ஸ்ட்டியூட் தயாரிக்கும் தடுப்பு மருந்து பற்றியும், பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு செய்கிறார். கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.