கொரோனா தடுப்பூசி – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

 

கொரோனா தடுப்பூசி – பிரதமர் மோடி  இன்று தொடங்கி வைக்கிறார்!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை, பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார்.

கொரோனா தடுப்பூசி – பிரதமர் மோடி  இன்று தொடங்கி வைக்கிறார்!

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக ஓய்ந்தபாடில்லை. இதனால் சுமார் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். கொரோனா வைரஸை வருங்காலங்களில் பரவாமல் தடுக்க, தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளை கொரோனா வைரஸுக்கு எதிராக பயன்படுத்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி – பிரதமர் மோடி  இன்று தொடங்கி வைக்கிறார்!

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். நாட்டில் 3 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி . முதற்கட்டமாக முன் களப்பணியாளர்கள் 3 கோடிப் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. 3 கோடி பேரை தொடர்ந்து 27 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும். முன்கள பணியாளர்களை தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும். 50 வயதுக்கு மேற்பட்டோரை தொடர்ந்து இணை நோயுள்ள 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.