கொரோனா தடுப்பு மருந்து: டெல்லியில் 30 வயது இளைஞர் உடலில் செலுத்தி பரிசோதனை

 

கொரோனா தடுப்பு மருந்து: டெல்லியில் 30 வயது இளைஞர் உடலில் செலுத்தி பரிசோதனை

கொரோனா நோய்த் தொற்றலைக் கண்டு உலகமே அச்சப்படும் சூழலில் தவித்துக்கொண்டிருக்கிறோம்.

நோய்த் தொற்று பரவால் இருக்க தனிமைப்படுத்துவதே ஒரே தீர்வாக இருக்கிறது. கொரோனாவிலிருந்து மீண்டவரின் பிளாஸ்மாவைக் கொண்டு அளிக்கப்படும் சிகிச்சை நல்ல பலன் அளிப்பதாகச் சொல்கிறார்கள்.

கொரோனா தடுப்பு மருந்து: டெல்லியில் 30 வயது இளைஞர் உடலில் செலுத்தி பரிசோதனை

உலகின் பல நாட்டு விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க கடும் முயற்சிகளை எடுத்துவருகின்றனர். ஆயினும் இந்த நிமிடம் வரை கொரோனா தடுப்பு மருந்து கண்டறியப்பட வில்லை என்பதே யதார்த்தம்.
அமெரிக்காவிலும் இதற்கான பல சோதனைகள் செய்யப்பட்டன. ஆனாலும் பலவற்றில் தோல்வியையே எதிர்கொள்ள வேண்டிய துயரமான சூழல். இங்கிலாந்தில் நடைபெற்ற பரிசோதனை முடிவுகள் நல்ல விதமான செய்தியை உலகிற்குச் சொல்லும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

கொரோனா தடுப்பு மருந்து: டெல்லியில் 30 வயது இளைஞர் உடலில் செலுத்தி பரிசோதனை

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் இந்தியாவிலும் நடந்துவருகின்றன.

அதன் முக்கியமான கட்டமாக இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மருந்தான் கோவாக்ஸின் மனித உடலுக்குள் செலுத்தும் பரிசோதனை தொடங்கியது. இன்று 30 வயது இளைஞருக்கு தடுப்பூசி மூலமாக கோவாக்ஸின் மருந்து செலுத்தப்பட்டது.

தமிழ்நாட்டிலும் சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் கோவாக்ஸின் மருந்து செலுத்தப்பட்டிருக்கிறது. இதற்காக தன்னார்வலர்கள் பலர் விருப்பப்பட்டு முன்வந்திருக்கின்றனர். மருந்து செலுத்தப்பட்டவர்கள் உடல்நிலை 14 நாள் தீவிர கண்காணிப்பில் இருக்கும். அதற்குப் பிறகு அடுத்த கட்ட சோதனை நடைபெறும்.