’இவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடையாது’ அமெரிக்காவில் கட்டுப்பாடு

 

’இவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடையாது’ அமெரிக்காவில் கட்டுப்பாடு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 7 கோடியே 45 லட்சத்து 34 ஆயிரத்து 581 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 5 கோடியே 23 லட்சத்து 73 ஆயிரத்து 081 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 16 லட்சத்து 55 ஆயிரத்து 230 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 2,05,06,270 பேர்.

’இவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடையாது’ அமெரிக்காவில் கட்டுப்பாடு

கொரோனா பாதிப்பில் அதிக இழப்புகளைச் சந்தித்து வரும் நாடு அமெரிக்காதான். இதுவரை 3 லட்சத்துக்கும் அதிமானவர்களைக் கொரோனாவுக்கு பலி கொடுத்து விட்டார்கள் நேற்றும்கூட 3,486 பேர் அமெரிக்காவில் இறந்துவிட்டார்கள்.

எனவே, கொரோனா தடுப்பூசியை அவசரக் காலப் பயன்பாட்டுக்கு செலுத்துவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது. அதன்படி, இரண்டு நாட்களாக ஃபைசர் கொரோனா தடுப்பூசி அமெரிக்காவில் அவசரக் காலப் பயன்பாட்டுக்குச் செலுத்தப்படுகிறது. அடுத்து மாடர்னா கொரோனா தடுப்பூசியும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

’இவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடையாது’ அமெரிக்காவில் கட்டுப்பாடு

இந்நிலையில் ஃபைசர் கொரோனா மருந்து செலுத்தப்பட்ட ஒருவருக்கு அலர்ஜி ஏற்பட்டது. உடனே அவரை பரிசோதனைக்கு உட்படுத்தியது உணவு மற்றும் சில வகை மருந்துகள் அவருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் என்று தெரிய வந்திருக்கிறது. அதனால் புதிய முடிவை அமெரிக்கா சுகாதாரத் துறை எடுத்துள்ளது.

அதன்படி, உணவு மற்றும் குறிப்பிட்ட வகை மருந்து அலர்ஜி உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடக்கூடாது என்ற முடிவெடுத்துள்ளார்கள். இதனால், கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எண்ணிக்கை சற்று குறையக்கூடும் என்று கருதப்படுகிறது.