“இந்தியாவில் ஜனவரியில் கொரோனா தடுப்பூசி” : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!

“இந்தியாவில் ஜனவரியில் கொரோனா தடுப்பூசி” : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!

இந்தியாவில் ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவில் ஜனவரியில் கொரோனா தடுப்பூசி” : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த மார்ச் மாதம் முதல் ஆரம்பமானது. இதனால் இந்தியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. பரவல் குறைந்த நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அதே சமயம் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

“இந்தியாவில் ஜனவரியில் கொரோனா தடுப்பூசி” : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கொரோனா தடுப்பூசி தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், ‘இந்தியாவில் ஜனவரியில் எந்த வாரத்திலும் கொரோனா தடுப்பூசி செலுத்தலாம் என்றும் மக்களின் பாதுகாப்பு, கொரோனா தடுப்பூசியின் வீரியம் தான் எங்களுக்கு முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

“இந்தியாவில் ஜனவரியில் கொரோனா தடுப்பூசி” : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!

கிட்டத்தட்ட கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை ஒரு கோடியை எட்டிய நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடமிருந்து நேர்மறையான செய்தி வெளியாகி இருப்பது ஆறுதல் அளிக்க கூடியதாக உள்ளது. முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.