Home உலகம் கொரோனா தடுப்பு மருந்து – வெள்ளை மாளிகை முக்கிய அறிவிப்பு

கொரோனா தடுப்பு மருந்து – வெள்ளை மாளிகை முக்கிய அறிவிப்பு

உலகமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதேபோல இறப்பு எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. பல நாடுகளில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து – வெள்ளை மாளிகை முக்கிய அறிவிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 5 கோடியே 79 லட்சத்து  10 ஆயிரத்து 511 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 01 லட்சத்து 08 ஆயிரத்து 847 நபர்கள்.

கொரோனா தடுப்பு மருந்து – வெள்ளை மாளிகை முக்கிய அறிவிப்பு

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 13 லட்சத்து 77 ஆயிரத்து 745 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.  

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடு அமெரிக்காதான். நேற்று மட்டுமே அங்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகள் கூடியிருக்கிறார்கள்.

அமெரிக்காவில் கொரோனா மொத்த பாதிப்பு 1,22,89,767 பேர். இவர்களில் 73,19,848 பேர் குணமடைந்துவிட்டனர். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்களின் எண்ணிக்கை 2,60,443 பேர்.

டெக்ஸாஸ், கலிபோர்னியா, ப்ளோரிடா ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதில் கலிபோர்னியாவில் சனிக்கிழமை முதல் லாக்டெளன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி என்பது அவசரமாகத் தேவைப்படும் நாடு அமெரிக்காதான். அங்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே தடுப்பூசி அவசரத் தேவைக்கு  வந்துவிடும் என ஃபைசர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில், வெள்ளை மாளிகை அறிவிப்பில் ‘இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவுக்கு 4 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகள் கிடைக்கும் விதமாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

மிக வேகமாக கொரோனா பரவி வரும் அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஒரு மருத்துவக் குழுவை அமைத்திருக்கிறார் ஜோ பைடன்.

கொரோனா தடுப்பு மருந்து – வெள்ளை மாளிகை முக்கிய அறிவிப்பு
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட பொன்னார் வீடு திரும்பினார்!

தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இறப்பு எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு...

சொத்து தகராறில் தொழிலாளி தலையில் கல்லை போட்டு படுகொலை!

விருதுநகர் ராஜபாளையம் அருகே சொத்து தகராறில் கூலி தொழிலாளியை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த, உறவினரை போலீசார் கைதுசெய்தனர். விருதுநகர் மாவட்டம்...

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் தந்தை காலமானார்!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்துள்ளார். சீமானின் சொந்த ஊரான அரணையூரில் அவர் உயிரிழந்ததாக நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்...

சாத்தான்குளம் கொலை வழக்கு… ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் தொடர்பாக டிஜிபிக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் சிறை மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றூ சாத்தான்குளம் போலீசாரால் கடந்த ஆண்டு...
- Advertisment -
TopTamilNews