“இன்று முதல் கொரோனா தடுப்பூசி” : முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்!

“இன்று முதல் கொரோனா தடுப்பூசி” : முதல்வர்  பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் இன்று தொடக்கிவைக்கிறார்.

“இன்று முதல் கொரோனா தடுப்பூசி” : முதல்வர்  பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்!

இந்நிலையில் தமிழகம் முழுவதும் 166 மையங்களில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படுகின்றன. முதல்வர் பழனிசாமி தடுப்பூசி போடும் திட்டத்தை மதுரையில் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் முதற்கட்டமாக 5.36 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சென்னையில் 12 இடங்கள், கோவையில் 4 இடங்கள், மதுரையில் 5 இடங்கள், திருச்சியில் 5 இடங்கள், சேலத்தில் 7 இடங்கள் என தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்த்தை தொடங்கி வைக்கும் பிரதமர் விழாவில், முதல்வர் பழனிசாமி காணொலியில் பங்கேற்று மதுரையில் தடுப்பூசி பணியை தொடங்கி வைக்கிறார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

“இன்று முதல் கொரோனா தடுப்பூசி” : முதல்வர்  பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்!

முன்னோட்டமாக தமிழகத்திற்கு 5.56 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு 5.36 லட்சமும் , பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகள் 20 ஆயிரமும் இடம்பெற்றுள்ளன. பிரதமர் மோடி அறிவிப்பின் படி, கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்கும் வகையில் முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட இருக்கிறது.