ஐக்கிய அமீரகத் துணை அதிபருக்கு கொரோனா தடுப்பூசி!

 

ஐக்கிய அமீரகத் துணை அதிபருக்கு கொரோனா தடுப்பூசி!

உலகம் முழுவதுமே கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 4 கோடியே 96 லட்சத்து 67 ஆயிரத்து 748 பேர். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 12 லட்சத்து 48 ஆயிரத்து 780 பேர்.

ஐக்கிய அமீரகத்தில் இதுவரையிலான கொரோனா பாதிப்பு 1,39,891. இவர்களில் நலம் பெற்றோர் 1,36,936 பேர். இறந்தவர்கள் 510 பேர். இதனால், ஐக்கிய அமீரகத்தில் கொரோனா தடுப்பு பணிகளைத் தீவிரப் படுத்தியுள்ளது ஐக்கிய அமீரக அரசு.

ஐக்கிய அமீரகத் துணை அதிபருக்கு கொரோனா தடுப்பூசி!

முன்கள வீரர்கள் என்றழைக்கப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோர்க்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்த முடிவெடுத்தது ஐக்கிய அமீரக அரசு. அதன்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஐக்கிய அமீரக துணை அதிபர் ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வந்திருக்கிறார். அவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த நர்ஸ் ஒருவர் இடம்பெற்றிருக்கிறார். இக்குழுவில் தான் இடம்பெற்றது குறித்து மிக நெகிழ்ச்சியாகவும் ஊடகங்களிடம் பேசியிருக்கிறார்.

ஐக்கிய அமீரகத் துணை அதிபருக்கு கொரோனா தடுப்பூசி!

பல நாடுகள் கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டும் நிலையில் ஐக்கிய அமீரகம் துணிச்சலோடு இறங்கியிருப்பது பலருக்குமே ஆச்சர்யம். ஆனால், கொரோனாவின் தீவிர பரவல் எல்லா நாடுகளையும் துணிய வைத்துவிடும் என்ற நிலையை உருவாக்கி வருகிறது.