இங்கிலாந்து ராணி எலிசபெத்க்கு கொரோனா தடுப்பூசி?

 

இங்கிலாந்து ராணி எலிசபெத்க்கு கொரோனா தடுப்பூசி?

கொரோனாவில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும், பல நாடுகளில் இரண்டாம் அலை வீசத் தொடங்கிவிட்டது கொரோனா.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 73 லட்சத்து 93 ஆயிரத்து 283 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 65 லட்சத்து 84 ஆயிரத்து 229 நபர்கள்.

இங்கிலாந்து ராணி எலிசபெத்க்கு கொரோனா தடுப்பூசி?

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 15 லட்சத்து 41 ஆயிரத்து 747 பேர். 15 லட்சத்தைக் கடந்து விட்டது மரணங்களின் எண்ணிக்கை. தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,92,67,307 பேர்.

கொரோனா அதிகப் பாதிப்புள்ள நாடுகளின் பட்டியலில் இடம்பெற்று விட்டது இங்கிலாந்து. இங்கிலாந்து நாட்டில் இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு 17,23,242 பேர். இவர்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை 61,245 பேர். குணமடைந்தவர்கள் விவரம் இல்லை.

செப்டம்பர் 15-ம் தேதிக்குப் பிறகு இங்கிலாந்தில் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியது. நவம்பர் 12-ம் தேதியன்று மட்டுமே 33,470 பேருக்கு புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.

இங்கிலாந்து ராணி எலிசபெத்க்கு கொரோனா தடுப்பூசி?

அதேபோல நவம்பர் 25-ம் தேதியன்று ஒரே நாளில் 696 பேர் மரணம் அடைந்தனர். இதனால், இங்கிலாந்தில் அமெரிக்காவின் கொரோனா தடுப்பூசியான ஃபைஸர் தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இங்கிலாந்தில் ராணி இரண்டாம் எலிசபெத்க்கு இன்னும் சில நாட்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும் எனும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஒருவகையில் அந்தத் தடுப்பு மருந்து குறித்த நம்பிக்கையை அந்நாட்டு மக்களுக்கு அளிக்கும் என்று பேசப்படுகிறது.

ராணிக்கு மட்டுமல்லாது, அவரின் கணவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தெரிய வந்திருக்கிறது.