‘கர்ப்பிணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி’ :ஐசிஎம்ஆர் இயக்குநர் அறிவிப்பு!

 

‘கர்ப்பிணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி’ :ஐசிஎம்ஆர் இயக்குநர் அறிவிப்பு!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை முதல் அலையை விட பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முதல் அலையில் முதியவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், 18 வயது முதல் அனைவர்க்கும் கொரோனா தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.

‘கர்ப்பிணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி’ :ஐசிஎம்ஆர் இயக்குநர் அறிவிப்பு!

கொரோனா 2வது அலையில் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்த முடியாத காரணத்தால் அவர்களை கொரோனா தாக்கும் அபாயம் ஏற்பட்டது. தற்போது பாலூட்டும் பெண்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

‘கர்ப்பிணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி’ :ஐசிஎம்ஆர் இயக்குநர் அறிவிப்பு!

இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்து வரும் நிலையில், இனி கர்ப்பிணிப் பெண்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என ஐசிஎம்ஆர் இயக்குனர் டாக்டர் பலராமன் பார்கவா தெரிவித்துள்ளார்.கர்ப்பிணிப் பெண்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், இதனால் கர்ப்பிணிப் பெண்களில் தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார். தற்போது குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனை நடைபெற்றும் வரும் நிலையில் செப்டம்பரில் பரிசோதனை முடிவுகள் தெரியவரும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவில் இதுவரை 31.50 கோடி பேருக்கும், தமிழகத்தில் இதுவரை 1.44 கோடி பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.