இவர்களுக்கெல்லாம் தடுப்பூசி கட்டாயம்… அதிரடி அறிவிப்பு!

 

இவர்களுக்கெல்லாம் தடுப்பூசி கட்டாயம்… அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கியது. முதலில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டினார்கள். ஆனால், நாட்கள் போக போக தடுப்பூசிகள் குறித்து வதந்திகள் அதிகமாக பரவியதால் மக்கள் மத்தியில் ஆர்வம் குறைந்தது. இதனிடையே, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமென அரசு அறிவித்தது.

இவர்களுக்கெல்லாம் தடுப்பூசி கட்டாயம்… அதிரடி அறிவிப்பு!

அப்போதும் மக்கள் மத்தியில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வம் இல்லை. குறிப்பாக, நடிகர் விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாளே மாரடைப்பு ஏற்பட்டதும் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததும் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. ஆனால், தடுப்பூசி போட்டுக் கொண்டதால் அவர் உயிரிழக்கவில்லையென சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டுகிறார்கள்.

இவர்களுக்கெல்லாம் தடுப்பூசி கட்டாயம்… அதிரடி அறிவிப்பு!

இந்த நிலையில், சென்னை மாநகரப் பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் தடுப்பூசி கட்டாயமாக போட்டுக் கொள்ள வேண்டுமென போக்குவரத்து மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சென்னையில் உள்ள 33 போக்குவரத்து கழக பணியாளர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்றும் பொதுமக்களுடன் தொடர்பு இருப்பதால் 45 வயதான நபர்கள் தடுப்பூசி போடுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.