‘முதல்வர், அமைச்சர்களுக்கு கொரோனா தடுப்பூசி’ : அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!

 

‘முதல்வர், அமைச்சர்களுக்கு கொரோனா தடுப்பூசி’ : அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!

முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரில் முதல் நாள் ஆளுநர் உரை நிகழ்த்தப்பட்ட நிலையில், 2 ஆம் நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த வகையில் நேற்று சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கேள்வி நேரம் நடந்தது.

‘முதல்வர், அமைச்சர்களுக்கு கொரோனா தடுப்பூசி’ : அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!

அப்போது பேசிய மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, தமிழகத்தில் 2000 மினி கிளினிக்கள் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பினார். அத்துடன் தினம் தினம் மக்களை சந்தித்து வரும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எப்போது கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

‘முதல்வர், அமைச்சர்களுக்கு கொரோனா தடுப்பூசி’ : அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், புதிதாக 2ஆயிரம் மினி கிளினிக்குகள் திறக்கப்படவுள்ளது. இதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். அதேபோல் ஏற்கனவே 822 மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. இதில் 7.34 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.mnதமிழகத்திற்கு 12,34,920 கொரோனா தடுப்பூசிகள் கிடைத்த நிலையில் 1,33,000 தடுப்பூசிகள் முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டுள்ளது. அத்துடன் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அதேபோல் 50வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட கருத்து கேட்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கிடைத்தால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.