40 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு கொரோனா தடுப்பூசி – ரஷ்யா அதிரடி

 

40 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு கொரோனா தடுப்பூசி – ரஷ்யா அதிரடி

கொரோனா பேரிடர் உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 3 லட்சத்து  51 ஆயிரத்து 589 பேர்.    

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 20 லட்சத்து 41 ஆயிரத்து 314 நபர்கள்.

40 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு கொரோனா தடுப்பூசி – ரஷ்யா அதிரடி

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 50 ஆயிரத்து 555 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.   

 உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யாவின் கேமாலியா நிறுவனம் தயாரித்துவிட்டது. அதை ஆகஸ்ட் 12-ம் தேதி பதிவும் செய்துவிட்டது. இந்த மருந்தின் நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்பப்படும் என்பதை அறிந்த அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின், ஸ்புட்னிக் V எனும் பெயரிட்ட அந்த தடுப்பூசியை தன் மகளுக்கே போடச் சொன்னார்.

40 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு கொரோனா தடுப்பூசி – ரஷ்யா அதிரடி

ஆனபோதும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அம்மருந்து குறித்த சந்தேகங்கள் கிளப்பி வந்தது. ஆனால், புகழ்பெற்ற மருத்துவ இதழான லாசெண்ட், ஸ்புட்னிக் 5 பாதுக்காப்பானது என்று ஆய்வறிந்து கட்டுரை எழுதியது.

இந்நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஸ்புட்னிக் V மருந்தைக் கொண்டு வரும் முயற்சியில் ரஷ்யா மும்முரமாக இறங்கி வருகிறது. ஸ்புட்னிக் V வின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதில் 40 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு ஸ்புட்னிக் V மருந்தைச் செலுத்தும் பணியில் உள்ளது.

40 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு கொரோனா தடுப்பூசி – ரஷ்யா அதிரடி

ஆயினும் ஓர் இடர்பாடாக, 40 ஆயிரம் பேரில் 14 சதவிகிதத்தினருக்கு தசைப் பிடிப்பு போன்ற லேசான பக்க விளைவுகள் ஏற்பட்டதாக ரஷ்ய நாட்டுச் செய்திகள் தெவித்தன. ஆயினும், வெளிநாட்டினரின் சந்தேகங்களுக்கு எல்லாம் விடை அளித்துவிட்டோம் என்று ரஷ்ய நாட்டு அரசு தெரிவித்துள்ளது.