“2 மணி நேரத்தில் 25 பேருக்கு கொரோனா தடுப்பூசி” 5 மாவட்டங்களில் நாளை ஒத்திகை!

“2 மணி நேரத்தில் 25 பேருக்கு கொரோனா தடுப்பூசி”  5 மாவட்டங்களில் நாளை ஒத்திகை!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் நாளை கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறவுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

“2 மணி நேரத்தில் 25 பேருக்கு கொரோனா தடுப்பூசி”  5 மாவட்டங்களில் நாளை ஒத்திகை!

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரோனா குறைந்தாலும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அரசு குறைக்கவில்லை.தினமும் சராசரியாக 70 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கொரோனா நோய் தடுப்புக்கான ஒத்திகை நாளை 5 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக சென்னை, திருவள்ளூர், நெல்லை ,கோவை, நீலகிரி மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை ஒத்திகை நடைபெறும். இரண்டு மணி நேரத்தில் 25 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி ஒத்திகை பார்க்கப்படும். செவிலியர்கள் உள்பட 21 ஆயிரத்து 170 சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

“2 மணி நேரத்தில் 25 பேருக்கு கொரோனா தடுப்பூசி”  5 மாவட்டங்களில் நாளை ஒத்திகை!

சென்னையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை உட்பட 3 இடங்களிலும் , நீலகிரியில் 3 இடங்களிலும் , நெல்லை மாவட்டத்தில் 3 என 11 இடங்களில் மற்றும் திருவள்ளூர் என மொத்தம் 11 இடங்களில் காலை 9 மணிக்கு இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதற்காக, அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் இருக்க மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.