“மெகா தடுப்பூசி முகாமில் 11.06 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி” – ராதாகிருஷ்ணன் சொல்லும் தகவல்!!

“மெகா தடுப்பூசி முகாமில் 11.06 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி” – ராதாகிருஷ்ணன் சொல்லும் தகவல்!!

தமிழகத்தில் நடக்கும் மெகா தடுப்பூசி முகாமில் மதியம் 1.20 மணி நிலவரப்படி 11.06 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

“மெகா தடுப்பூசி முகாமில் 11.06 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி” – ராதாகிருஷ்ணன் சொல்லும் தகவல்!!

தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று காலை 7 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரவு 7 மணி வரை 40 ஆயிரம் முகாம்களில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுஇடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என சென்னையில் 1600 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆதார் இல்லாதவர்களும் தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மெகா தடுப்பூசி முகாமில் 11.06 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி” – ராதாகிருஷ்ணன் சொல்லும் தகவல்!!

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ” தமிழ்நாடு முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்துவரும் நிலையில், பிற்பகல் 1 மணி வரை 6 மணி நேரத்தில் 11 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சிறப்பு தடுப்பூசி முகாமில் மதியம் 12 மணி வரை மட்டும் 7 லட்சத்தை 90 ஆயிரம் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் எதிர்பார்த்ததை விட அதிகளவில் மக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். இனிவரும் காலங்களில் வாரத்திற்கு ஒரு முறை சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிட்டிருக்கிறோம்; அதற்கு தேவையான தடுப்பூசிகளை ஒன்றிய அரசிடம் கேட்டு பெற முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.