கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள போகிறாரா ரஷ்ய அதிபர்?

 

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள போகிறாரா ரஷ்ய அதிபர்?

உலகளவில் பெரும் அச்சத்தையும் பாதிப்பையும் விளைவித்து வருகிறது கொரோனா நோய்த் தொற்று.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 35 லட்சத்து 52 ஆயிரத்து 625 பேர்.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 48 லட்சத்து 81 ஆயிரத்து 239 நபர்கள்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள போகிறாரா ரஷ்ய அதிபர்?

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 6 ஆயிரத்து 381 பேர்.

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யாவின் கேமாலியா நிறுவனம் தயாரித்துவிட்டது. அதை ஆகஸ்ட் 12-ம் தேதி பதிவும் செய்துவிட்டது. இந்த மருந்தின் நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்பப்படும் என்பதை அறிந்த அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின், ஸ்புட்னிக் V எனும் பெயரிட்ட அந்த தடுப்பூசியை தன் மகளுக்கே போடச் சொன்னார்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள போகிறாரா ரஷ்ய அதிபர்?

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அம்மருந்து குறித்த சந்தேகங்கள் கிளப்பி வந்தன. ஆனால், புகழ்பெற்ற மருத்துவ இதழான லாசெண்ட், ஸ்புட்னிக் 5 பாதுக்காப்பானது என்று ஆய்வறிந்து கட்டுரை எழுதியது.

பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் முயற்சியில் முதல் கட்டமாக வயது முதியவர்களுக்கும் முன்கள வீரர்களும் தடுப்பூசி போடும் பணியை ரஷ்ய அரசு தொடங்கி விட்டது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள போகிறாரா ரஷ்ய அதிபர்?

இந்நிலையில் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் V -யை ரஷ்ய அதிபர் போட்டுக்கொள்ள விருக்கிறார் எனும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனாலும் இந்தச் செய்தியை அந்த நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்க வில்லை.