கொரோனா தடுப்பு மருந்து – 100 கோடி டோஸ் ஆர்டர்

 

கொரோனா தடுப்பு மருந்து – 100 கோடி டோஸ் ஆர்டர்

கொரோனாவைப் போல மாபெரும் பேரிடரை இதற்கு முன் உலகம் சந்திருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், கடந்த ஒன்பது மாதங்களாகத் தொல்லை தருகிறது கொரோனா வைரஸ் தாக்குதல்தான். சென்ற ஆண்டு சீனாவில் தொடங்கிய இந்தத் துயரம் இன்னும் முடிந்தபாடில்லை.

உலகளவில் இரு கோடி பேருக்கு அதிகமான நபர்கள் இந்தக் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டு நாடுகள் ஒரு லட்சம் பேருக்கு அதிகமானவர்களை இழந்துள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து – 100 கோடி டோஸ் ஆர்டர்

இந்தத் துயரம் முடிவடைய ஒரே வழி கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதுதான். பல நாடுகளும் இதற்கான முனைப்போடு செயலில் இறங்கியுள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் (Gamaleya Reserch Institue) தடுப்பூசியை மனிதர்களிடம் செலுத்தி வெற்றிகரமாக அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. கொரோனா தடுப்பூசியை நேற்று பதிவு செய்துவிட்டது ரஷ்யா.

கொரோனா தடுப்பு மருந்து – 100 கோடி டோஸ் ஆர்டர்

கொரோனா தடுப்பூசிக்கான டெஸ்டுகள் முடிவடைந்ததாக ரஷ்யாவின் சுகாதாரத் துறை அமைச்சர் சில நாட்களுக்கு முன்பே அறிவித்தார். ஆகஸ்ட்டில் பதிவு செய்து அக்டோபரில் நாடு முழுவதும் முகாம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருதார்.

கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் அடுத்தடுத்து வேலைகளை சுறுசுறுப்பாகச் செய்துவருகிறது.

கொரோனா தடுப்பு மருந்து – 100 கோடி டோஸ் ஆர்டர்

ரஷ்யாவின் ஸ்புட்னிக் எனும் கொரோனா தடுப்பூசியை இன்னும் இரு வாரங்களில் மக்கள் போட்டுக்கொள்ள முன்வரலாம். அப்படி, தடுப்பூசி போட்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏதேனும் இருக்கிறதா என்று தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளிலிருந்து 100 கோடி டோஸ்க்கு கொரோனா தடுப்பு மருந்து ஆர்டர் வந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

5 நாடுகளில் ஒரு வருடத்திற்கு 500 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்து டோஸ் தயாரிக்க ரஷ்யா முடிவெடுத்திருக்கிறது.