“மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்” தமிழக அரசு

 

“மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி  சிறப்பு முகாம்கள்” தமிழக அரசு

மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் மாவட்ட அளவில் நடத்தப்படுகின்றன என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

“மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி  சிறப்பு முகாம்கள்” தமிழக அரசு

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 28ம் தேதி வரை ஊரடங்கு மீட்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு மாவட்டங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. அதேசமயம் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுவதுடன் பொதுமக்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த சூழலில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போட வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, இது குறித்து இரண்டு வாரத்தில் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தார்

“மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி  சிறப்பு முகாம்கள்” தமிழக அரசு

இந்நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பு செலுத்தும் சிறப்பு முகாம்கள் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு வருகின்றன என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நிற்பதை தவிர்க்க உடனடியாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடக்க இயலாதவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தக்கூடிய வழக்கு ஜூன் 29 ஒத்திவைக்கப்பட்டுள்ளது.