சென்னிமலையில் தனியார் மருத்துவமனை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்… அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்!

 

சென்னிமலையில் தனியார் மருத்துவமனை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்… அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்!

ஈரோடு

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் தனியார் மருத்துவமனை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் சாமிநாதன், கூட்டுறவு நகர வங்கி பயனாளிகளுக்கு ரூ.28.35 லட்சம் கடனுதவிகளையும் வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பழைய அரசு மருத்துவமனையில் இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் ஏ.எம்.சி. பல்நோக்கு மருத்துவமனையின் சமூக பங்களிப்பு நிதியிலிருந்து கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனை, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவங்கி வைத்து, சென்னிமலை கூட்டுறவு நகர வங்கியில் 14 பயனாளிகளுக்கு ரூ.28.35 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “தனியார் பங்களிப்புடன் காங்கேயம் தொகுதி சென்னிமலை பகுதி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, முத்தூர், காங்கேயம், வெள்ளக்கோயில் மற்றும் சென்னிமலை பேரூராட்சி பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இன்றை தினம் காங்கேயம் தொகுதியில் சுமார் ஆயிரத்து 200 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி தனியார் பங்களிப்புடன் வழங்கப்படுகிறது”.

சென்னிமலையில் தனியார் மருத்துவமனை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்… அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்!

“ஏ.எம்.சி பல்நோக்கு மருத்துவமனை மற்றும் இந்திய தொழிற் கூட்டமைப்பின் சமூக பங்களிப்பு நிதியிலிருந்து, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து, அரசின் மூலமாகவும் படிப்படியாக தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கும் தடுப்பு மருந்தாக தடுப்பூசி உள்ளது. அதன்படி, இன்று முதல் தவணை தடுப்பூசி வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது”.

இந்த நிகழ்ச்சியில், பெருந்துறை வட்டாட்சியர் கார்த்தி, திருப்பூர் ஏ.எம்.சி. மருத்துவமனை மருத்துவர் மரு.பிரபுசங்கர், இந்திய தொழில் கூட்டமைப்பு முன்னாள் தலைவர் வெங்கடேஷ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.