இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியது!

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியது!

இதுவரை உலகம் முழுவதும் 97 லட்சத்து 73ஆயிரத்து 252 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 4லட்சத்து 93ஆயிரத்து 181 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 52லட்சத்து 93 ஆயிரத்து 804 பேர் குணமாகியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியது!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 4,73,105 லிருந்து 5,01,864 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,92,626 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,487 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது.