கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க ரூ.11 லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை!

 

கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க ரூ.11 லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை!

சென்னையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க, தனியார் மருத்துவமனை ஒன்று ரூ.11 லட்சம் கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த 55 வயதான அன்பழகன், கடந்த16ஆம் தேதி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,. அதன்பின் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதியானது. ஆரம்பத்தில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஊசி மருந்தை செலுத்தினால், உடல் நிலை சீராகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனை நம்பி உறவினர்களும் அவசர அவசரமாக ஒரு லட்சம் பணத்தை தயார் செய்து கட்டியுள்ளனர்.

கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க ரூ.11 லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை!

இதனையடுத்து கடந்த வாரம் மூன்று லட்ச ரூபாய் பணம் செலுத்தும்படி, மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்ததால் அன்பழகனின் குடும்பத்தினர் அதனையும் கட்டினர். இருப்பினும் சிகிச்சை பலனின்றிம் நேற்று இரவு அன்பழகன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 20 நாட்களாக சிகிச்சை அளித்ததற்கு ஏழு லட்ச ரூபாய் மீதி பணம் கட்டினால் மட்டுமே உடலை தருவோம் என கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்ச்சை ஏற்பட்டதையடுத்து இஅன்பழகன் உடலை மருத்துவமனை நிர்வாகம், ஆம்புலன்ஸ் மூலம் காசிமேடு மயானத்திற்கு அனுப்பி வைத்து அடக்கம் செய்தது.