‘4 லட்சத்தை எட்டியது’ கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை; சுகாதாரத்துறை ரிப்போர்ட் இதோ!

 

‘4 லட்சத்தை எட்டியது’ கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை; சுகாதாரத்துறை ரிப்போர்ட் இதோ!

இந்தியாவில் கொரோனாவால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,05,681 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரமாக மீண்டும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து 40 ஆயிரத்துக்கு மேல் பாதிப்பு பதிவாகிறது. இது மூன்றாம் அலைக்கான அறிகுறியாக இருக்கலாம் என ஐசிஎம்ஆரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

‘4 லட்சத்தை எட்டியது’ கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை; சுகாதாரத்துறை ரிப்போர்ட் இதோ!

அதில், கடந்த 24 மணி நேரத்தில் 42,618 பேருக்கு கொரோனா உறுதியானதாகவும் 330 பேர் உயிரிழந்ததாகவும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,05,681 ஆக உயர்ந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 3,29,45,907 ஆக உயர்ந்துள்ளதாகவும் இதுவரை 4,40,225 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்திருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு நாள் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 47 ஆயிரம், நேற்று 45 ஆயிரமாக இருந்த நிலையில் இன்று 42 ஆயிரமாக குறைந்துள்ளது. அதே போல உயிரிழப்புகளும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.