பேருந்துகளில் ஆக்சிஜனுடன் கொரோனா சிகிச்சை… அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி!

 

பேருந்துகளில் ஆக்சிஜனுடன் கொரோனா சிகிச்சை… அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி வருவதால், நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் புதிய நோயாளிகள் அனுமதிக்கப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. அதே வேளையில், அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி இருப்பதால் கல்லூரிகள் , பள்ளிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

பேருந்துகளில் ஆக்சிஜனுடன் கொரோனா சிகிச்சை… அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி!

இருப்பினும், நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதால் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் மருத்துவமனையிலேயே காத்துக் கிடக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. படுக்கைக்காக காத்திருக்கும் போது பலர் உயிரிழக்கவும் நேரிடுகிறது. இத்தகைய சிக்கலான சூழலில், நோயாளிகளை காப்பாற்ற முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது சுகாதாரத்துறை.

இந்த நிலையில், படுக்கை வசதி கொண்ட பேருந்து ஆக்சிஜனுடன் சிகிச்சை தர நடவடிக்கை முடிவெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மக்கள் நலவாழ்வு துறை அமைச்சருடன் ஆலோசித்து பேருந்துகளில் சிகிச்சை தர நடவடிக்கை எடுக்கப்படுமென கூறியுள்ளார்.