நாடு முழுவதும் 2.08 லட்சம் பேருக்கு கொரோனா சிகிச்சை!

 

நாடு முழுவதும் 2.08 லட்சம் பேருக்கு கொரோனா சிகிச்சை!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 13,788 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டம் இன்னும் சில மாதங்களில் முடியப் போகிறது. வைரஸுக்கு எதிரான இரண்டு தடுப்பூசிகள், கடந்த 16ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் 3 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். ஆனால், தடுப்பூசிகள் மீதான நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் குறைவாக இருப்பதாக இந்த இலக்கை அடைய முடியுமா? என்ற கேள்வி எழுதிருக்கிறது.

நாடு முழுவதும் 2.08 லட்சம் பேருக்கு கொரோனா சிகிச்சை!

தடுப்பூசிகள் சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக பரவலாக கூறப்படும் நிலையில், ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டால் தான் மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கை அதிகரிக்கும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் 2.08 லட்சம் பேருக்கு கொரோனா சிகிச்சை!

கடந்த 24 மணி நேரத்தில் 13,788 பேருக்கு கொரோனா உறுதியானதாகவும், 145 பேர் உயிரிழந்ததாகவும், 14,457 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மொத்த பாதிப்பு 1,05,71,773 ஆக உயர்ந்துள்ளதாகவும், உயிரிழப்புகள் 1,52,419 ஆக அதிகரித்துள்ளதாகவும் 2,08,012 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.