நாடு முழுவதும் 1.76 லட்சம் பேருக்கு கொரோனா சிகிச்சை!

 

நாடு முழுவதும் 1.76 லட்சம் பேருக்கு கொரோனா சிகிச்சை!

இந்தியாவில் 1,76 லட்சம் பேருக்கு மட்டுமே கொரோனா சிகிச்சை அளிக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. பாதிப்பின் ஆரம்பக்கட்டத்தில் நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிதாக கொரோனா உறுதியாகும் எண்ணிக்கை பன்மடங்கு குறைந்திருக்கிறது. இதனிடையே, தடுப்பூசி செலுத்தும் திட்டமும் தொடங்கி விட்டது. நாடு முழுவதும் 3000 தடுப்பூசி செலுத்தும் மையங்களில், முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை 20,29,480 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 1.76 லட்சம் பேருக்கு கொரோனா சிகிச்சை!

இந்த நிலையில், இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12,689 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 1,06,89,527 ஆக உயர்ந்திருப்பதாகவும் 137 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகள் 1,53,724 ஆக அதிகரித்துள்ளதாகவும் தற்போது 1,76,498 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 13,320 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 1,03,59,305 பேர் டிஸ்சார்ஜ் ஆகியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.