5 லட்சத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா சிகிச்சை – சுகாதாரத்துறை ரிப்போர்ட் இதோ!

 

5 லட்சத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா சிகிச்சை – சுகாதாரத்துறை ரிப்போர்ட் இதோ!

இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துள்ளது. மே மாத மத்தியில் 4 லட்சத்துக்கு மேல் இருந்த பாதிப்பு தற்போது 50 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்துள்ளது. 4 ஆயிரத்துக்கு மேல் பதிவான கொரோனா மரணங்கள் தற்போது ஆயிரத்துக்குக் கீழ் குறைந்துள்ளது. டிஸ்சார்ஜ் செய்யப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

5 லட்சத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா சிகிச்சை – சுகாதாரத்துறை ரிப்போர்ட் இதோ!

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,111 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 738 பேர் பலியாகி இருப்பதாகவும் 57,477 பேர் குணமடைந்து இருப்பதாகவும் 4,95,533 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 3,05,02,362, குணமடைந்தோர் எண்ணிக்கை 2,96,05,779, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,01,050 ஆகவும் அதிகரித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.