அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கு கொரோனா சிகிச்சை தொடங்கியது

 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கு கொரோனா சிகிச்சை தொடங்கியது

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்க்கும் அவரின் மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 3-ம் தேதியன்று அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார்.

தேர்தலில் வெற்றிபெற பல இடங்களில் ட்ரம்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவரோடு எப்போதும் அவரின் மனைவி மெலனியா உடன் செல்வது வழக்கம். இந்நிலையில் அதிபர் ட்ரம்பின் முதன்மை உதவியாளர் ஹோப் ஹிக்ஸ்க்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கு கொரோனா சிகிச்சை தொடங்கியது

ஹோப் ஹிக்ஸ்க்கு உடனடியாகக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. டெஸ்ட் முடிவு அவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிபர் ட்ரம்ப் பிரச்சாரம் மேற்கொள்ளும்போடு உடன் இருந்தவர் ஹோப் ஹிக்ஸ். அதனால், ட்ரம்ப்க்கும் அவருடன் பயணிக்கும் அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப்க்கும் கொரோனா தொற்று பரவியிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

ஹோப் ஹிக்ஸ் பெரும்பாலான நேரத்தில் மாஸ்க் அணிந்திருந்தாலும் பாதுகாப்பு நடவடிக்கையாக ட்ரம்ப்க்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவிக்கும் கொரோனா பரிசோத்னை செய்யப்பட்டதில் இருவருக்கும் கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்தது. உடனே ’தானும் தன் மனைவியும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டு, தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறோம்’ என்று ட்ரம்ப் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/realDonaldTrump/status/1311892190680014849

இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியாவுக்கு கொரோனா சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தொடங்கி விட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ட்ரம்ப் விரைவில் குணமடைய உலகின் பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் செய்தி அனுப்பி வருகின்றனர்.