ஒலிம்பிக்கில் கொரோனா மொத்த பாதிப்பு 87 ஆக உயர்வு!

 

ஒலிம்பிக்கில் கொரோனா மொத்த பாதிப்பு  87 ஆக உயர்வு!

ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

ஒலிம்பிக்கில் கொரோனா மொத்த பாதிப்பு  87 ஆக உயர்வு!

ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை தொடங்க உள்ளன. இதில் நூற்றுக்கணக்கான இந்திய வீரர் வீராங்கனைகள் பங்கேற்று தங்கள் திறமையை நிரூபிக்க காத்திருக்கின்றனர். குறிப்பாக இந்த ஒலிம்பிக் போட்டியில் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங்கும் தேசிய கொடி ஏந்தி செல்ல உள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது. அதேபோல் ஒலிம்பிக் நிறைவு விழாவான ஆகஸ்ட் 8ஆம் தேதி மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தேசியக் கொடியை ஏந்திச் செல்ல உள்ளார். இந்த சூழலில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளவுள்ள வீரர்கள் மற்றும் அங்குள்ள ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகஒலிம்பிக் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

ஒலிம்பிக்கில் கொரோனா மொத்த பாதிப்பு  87 ஆக உயர்வு!

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவிருந்த மேலும் 2 தடகள வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது என்று ஒலிம்பிக் நிர்வாக குழு தெரிவித்துள்ளது.