தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன், மாமனார், மாமியாருக்கு கொரோனா!

 

தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன், மாமனார், மாமியாருக்கு கொரோனா!

தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனின் அவரது மனைவி, மகன், மாமனாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன், மாமனார், மாமியாருக்கு கொரோனா!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பலர் உயிரிழந்து வருகின்றனர். மாநிலத்தில் நேற்று மட்டும் கொரோனா பாதிப்பு 1,75,000ஐ கடந்துள்ளது. கொரோனா தொற்றால் மேலும் 4,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 1,75,678 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று 1,298 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 87,235ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரேநாளில் 70 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 2,551ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 3,861 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 1,21,776பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன், மாமனார், மாமியாருக்கு கொரோனா!

இதனிடையே, கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது தமிழக அரசு. ஆனாலும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவ ஊழியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இலக்காகி வருகின்றனர்.

இந்தநிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி கிருத்திகா, மகன் அரவிந்த், மாமனார் நடராஜன் மற்றும் மாமியார் என குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். நெருங்கிய உறவினர் தொடர்பு மூலமாக குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.