கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியருக்கு கொரோனா : ஆவடியில் பரபரப்பு!!

 

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியருக்கு கொரோனா : ஆவடியில் பரபரப்பு!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஒரேநாளில் 1243 பேருக்கு தொற்று உறுதியானது. இதன்மூலம் கொரோனா தொற்றுபாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 65 ஆயிரத்தைக் கடந்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர் , தஞ்சாவூர் , காஞ்சிபுரம், திருப்பூர் ஆகிய பகுதிகளில் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா இரண்டாவது அலை வீசுமோ? மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ? என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.அதனால் கொரோனா தடுப்பூசி அனைவரும் தவறாமல் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியருக்கு கொரோனா : ஆவடியில் பரபரப்பு!!

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டதிற்கு உட்பட்ட ஆவடி சின்னம்மன் கோவில் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பள்ளி ஆசிரியர்  கடந்த 6 தேதி கொரோனா தடுப்பு ஊசி போட்டு கொண்டார். இதை தொடர்ந்து கடந்த 16 ஆம் தேதி ஆசிரியருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியருக்கு கொரோனா : ஆவடியில் பரபரப்பு!!

பொதுமக்கள் தடுப்பூசி போடப்பட்ட பின்பு பாதுகாப்புடன் இருக்க வேண்டும். என அரசு அறிவுறுத்தி வரும் நிலையில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி பின்பும் ஆசிரியருக்கு மீண்டும் கொரோனா தொற்று உண்டாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.