இன்னொரு நாட்டின் அதிபருக்கும் கொரோனா? யார் தெரியுமா?

 

இன்னொரு நாட்டின் அதிபருக்கும் கொரோனா? யார் தெரியுமா?

கொரோனாவின் கோரத்தாண்டவம் உலகம் முழுவதும் கொடூரமாக வெளிப்படுகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 1 லட்சத்து  5 ஆயிரத்து 740 பேர். இன்றைய காலைவரை, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 15 லட்சத்து 53 ஆயிரத்து 773 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 14 லட்சத்து 14 ஆயிரத்து 868 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,71,37,099 பேர்.

இன்னொரு நாட்டின் அதிபருக்கும் கொரோனா? யார் தெரியுமா?

கொரோனா பரவல் எனொபது அனைத்துப் பிரிவினருக்குமே பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஒருநாட்டின் உட்சபட்ச அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் இதில் அடங்குவர். அமெரிக்காவின் அதிபர் டொனால்டு ட்ரம்ப்க்கு கொரோனா தொற்று பரவியது. அவருக்கு மட்டுமல்ல, அவரின் மனைவி, மகனுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷீஸ்டினுக்கு கொரோனா பாதித்தது. பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சையால் நலம்பெற்று வந்தார். இப்படி பல நாட்டு அதிபர், பிரதமர்களுக்கும் கொரோனா தொற்று வந்து சென்றுள்ளது.

இன்னொரு நாட்டின் அதிபருக்கும் கொரோனா? யார் தெரியுமா?

இந்நிலையில் பெலிஸ் நாட்டின் பிரதம ஜான் பிரிசெனோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டனின் ஆளுக்கைக்கு உட்பட்ட நாடு பெலிஸ். சுமார் 4 லட்சத்து 8 ஆயிரம் பேர் மக்கள் தொகை கொண்டு குட்டி நாடு பெலிஸ்.

இன்னொரு நாட்டின் அதிபருக்கும் கொரோனா? யார் தெரியுமா?

60 வயதான ஜான் பிரிசெனாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரை தனிமை வைத்து, சிகிச்சை அளிக்க அந்நாட்டு மருத்துவர்கள் முடிவெடுத்துள்ளனர். ஆயினும், அவர் இயல்பாகவே இருப்பதாகவும் தீவிர சிகிச்சை தேவைப்படும் நிலையில் இல்லை என்றும் கூறப்படுகிறது.