மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பணியாற்றும் இணை இயக்குநர் ஒருவருக்கு கொரோனா!

 

மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பணியாற்றும் இணை இயக்குநர் ஒருவருக்கு கொரோனா!

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் தமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு தடை தொடரும் என்றும் பிற மாநிலங்களுக்கான போக்குவரத்து தடை நீடிக்கும் என்றும் அறிவித்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பணியாற்றும் இணை இயக்குநர் ஒருவருக்கு கொரோனா!

அந்த வகையில் மாதவரம் ஆவின் பால் பண்ணை மூலம் சென்னை முழுவதும் நாள் ஒன்றுக்கு 2 லட்சத்து 38 ஆயிரம் பால்பாக்கெட் விநியோகம் செய்து வருகிறது. இங்கு பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் ஆவின் இணை இயக்குநர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பணிபுரிந்து வந்த நிலையில் அதிகாரிக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே பால்பண்ணையில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதே நிலைமை இருக்கும் பட்சத்தில் ஆவின் பால் தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.